விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்காது கட்சிக்குள் இணைத்துக்கொள்ளும் செயற்பாடே காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
சிறிலிய வங்கி கணக்குப் போலியான தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே, முழு குடும்பமும் போலியான வகையில் மக்கள் நிதியை சூறையாடியுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தும் போது பல்வேறு கருத்துக்களை பரப்பிவருகின்றனர். ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இணைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ராஜபக்ஸவைச் சூழ உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். விசாரணைகளைத் துரிதப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும்.