20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : ஹேமகுமார நாணயக்கார !

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார கண்டியில் நேற்று (19) தெரிவித்தார்.

3

தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, சியம் மகா நிகாயவின் அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்கர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரை நேற்று சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து ஹேமகுமார நாணயக்கார தெரிவிக்கையில்,

 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கு பல்வேறு சக்திகள் செயற்பட்ட போதிலும், அவற்றைத் தாண்டி 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக எமக்கு ஏற்பட்ட பாரிய சிக்கலைத் தீர்ப்பதற்கு எண்ணியுள்ளோம். கடவுளின் ஆசியுடன் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், புத்திசாதுரியமுள்ளவர்கள் இந்த நியாயமான நிலைமையைப் புரிந்துகொண்டு, ஜனாதிபதியுடன் கைகோர்ப்பார்கள் என பாரிய நம்பிக்கையுள்ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணாயக்கார சியம் மகா நிகாயவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர், திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,

அதிகாரத்திற்கு வந்தவுடன் மீண்டும் மாற்றுவார்களோ தெரியவில்லை. புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும். தற்போதைய முறையில் எதனையும் செய்ய முடியாது. இடமளிக்கப்படுவதில்லை. அதிகளவானோர் எதிர்க்கட்சியிலேயே உள்ளனர் என்றார்.