மும்­பையில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­றது !

மும்­பையில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­ற­மை­யினால் மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்­றிலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் தற்­போது பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இதனால் மும்­பையில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­றது. நேற்­று­முன்­தினம் மும்­பை­நகர் மற்றும் புற­நகர் பகு­தி­களில் பலத்த மழை பெய்­த­மை­யினால் தாதர் மேற்கு, சானே குரு­ஜிமார்க் பகு­தியில் உள்ள கிறிஸ்­தவ ஆலயம், மகா­லட்­சுமி சந்தி, பூலாபாய் தேசாய் மார்க், கோபால் தேஷ்முக் சந்தி உள்­ளிட்ட பகு­திகள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

மேலும், மழை நீர் சாலை­களில் பெருக்­கெ­டுத்து ஓடு­வதால், சாலை போக்­கு­வ­ரத்து கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கன­மழை கார­ண­மாக மும்­பையில் ரயில் சேவை பெரிதும் பாதிக்­கப்­பட்டு உள்­ளது. குறிப்­பாக புற­நகர் பகு­தி­களில் ரயில் தண்­ட­வா­ளங்கள் மழை நீரில் மூழ்­கி­யுள்­ள­மை­யினால் ரயில் போக்­கு­வ­ரத்து பெரிதும் பாதிக்­க­ப்பட்­டுள்­ளது. மேலும், சாலைகள் மற்றும் தாழ்­வான பகு­தி­களில் மழைநீர் தேங்­கி­யுள்­ள­மையால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு பாட­சா­லை­களுக்கு விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு மும்பை பல்­க­லைக்­க­ழ­கத்தின் பரீட்­சை­களும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.