பாறுக் ஷிஹான்
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக முஹிதீன் ஜூம்மா பள்ளிவால் ஆரம்பிக்கப்பட்டதனால் அங்கு முஸ்லீம் மக்கள் அதிகமாக மீள்குடியேற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 12.6.2015 அன்று சுமார் 40க்கு மேற்பட்ட மக்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு இக்கடமையை நிறைவேற்றினார்கள்.
தமிழீழ விடுதலை புலிகளின் மினி முகாமாகவும் சிறிய வைத்தியசாலையாகவும் இப்பள்ளிவாசல் பகுதி கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.தற்போது இப்பள்ளிவாசல் மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
ஏ 9 வீதியின் கிழக்கு பக்கமாக உள்ள 55 ஆம் கட்டை பிரதேசத்திற்கும் இரணைமடு பகுதிக்கும் நடுவே இதன் அமைவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மீள்குடியேறும் மக்களை தவிர தொழில் நிமிர்த்தம் மற்றும் ஏனைய தேவைகளிற்காக பலரும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்வதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல் இன்று மீள கட்டியெழுப்ப காரணமாக உள்ளவர்கள் யாழ்ப்பாணம்.கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் என தெரிவித்துள்ள அப்பள்ளிவாசல் உப தலைவர் சாஹூல் ஹமீத் முஹமட் பைசல் இதற்கு TOPAZ நிறுவனம் உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவான KN-18 பகுதியில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.குறிப்பாக கூறினால் கிளிநொச்சி கணகாம்பிகைக்குளம் இலக்கம் 123 சேவிஸ் வீதியில் அமையப்பெற்றுள்ளது.
இப்பள்ளிவாசலை சூழ 18 குடும்பங்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் வாழ்வாதாரத்திற்காக அன்றாடம் கூலி வேலை செய்வதிலும் சிறிய கடைகளையும் நடாத்தி வருகின்றனர்.
இவர்களை மேற்சொன்ன நிறுவனம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் ஊக்கப்படுத்துகின்றனர்.இப்பள்ளி வாலிற்கு வவுனியா சுடுவந்தபுலம் பகுதியை சேர்ந்த மௌலவி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனால் இவருக்கு தங்குவதற்கு கூட ஒழுங்கான அறை அமைக்கப்படவில்லை.
அத்துடன் இவரது சம்பளம் கூட எதுவித வருமானமும் பள்ளிவாலிற்கு இன்மையினால் கடைகள் தனியாரிடம் வசுலிக்கப்பட்டே வழங்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளது.
எனவே தான் இப்பள்ளிவாசல் தொடர்பாக பின்வரும் தேவைகள் காணப்படுவதாக அறிய முடிகின்றது.
அதாவது மதிரஸா அமைத்தல்(இது தற்போது பள்ளிவாசலின் உள்ளே இடம்பெறுகின்றது)இமலசல கூடம் அமைத்தல்(தற்போது உள்ளது சீரற்று காணப்படுகின்றது)
சுற்றுமதில் அமைத்தல்(தற்போது சிலரின் உதவியால் முட்கம்பி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது)
மௌலவி தங்குமிட வசதி
பெண்களிற்கான தொழுகை அறை
வுழு செய்யும் தடாகம்
குர்ஆன்இஹதீஸ் உட்பட வைக்கக்கூடிய அலுமாரி
மதிரஸா நடத்துவதற்குரிய தளபாடங்கள்
பள்ளிவாசலிற்கு நிரந்திர வருமானத்திற்காக அறைகளை அமைத்தல் என்பன தேவைகளாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயங்களை செய்து தர விரும்புகின்றவர்கள் பள்ளிவால் தலைவரான சரபுல் அனாம்-0776590632 உப தலைவர் பைசல்-0778311883 ஆகியோரிடம் தொடர்பு கொள்ள முடியும்.
அல்லது பள்ளிவாசல் வங்கி கணக்கிலக்கமாக ஹொமர்சல் வங்கி-8155017941 உதவித்தொகையை வைப்பிலிடலாம்.
இவ் ஜூம்மா பள்ளிவால் தவிர்ந்த இரு ஜூம்மா பள்ளிவால்கள் கரடிப்பொக்கு கச்சேரி பகுதியில் அமையப் பெற்று சிறப்பாக இயங்கி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.