ஃபுளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான ஜெப் புஷ், அங்கு வைத்து தான் கண்ட வெற்றிகளை தனக்கான சாதகமான காரணங்களாக முன்வைத்தார்.
அமெரிக்க தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த ஜெப் புஷ், அது தொடர்பான தான் என்ன செய்யப் போகிறேன் என்பது தனது கேள்வியெனவும் தெரிவித்ததோடு, ‘நான் முடிவெடுத்து விட்டேன். நான் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான வேட்பாளர்’ எனத் தெரிவித்து தனது உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்தார்.
இத்தேர்தலுக்கான வேட்பாளராக ஜெப் புஷ் களமிறங்குவார் என முன்னரே எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் உத்தியோகபூர்வமான அறிவிப்பதெனையும் விடுக்காது காணப்பட, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பேர் இதற்கு முன்னர் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்திருந்தனர். ஆகவே, குடியரசுக் கட்சியைச் 11ஆவது நபராக ஜெப் புஷ் இணைந்து கொள்கிறார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் மகனாகவும் சகோதரராகவும் இருந்த போதிலும், இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மீதும் காணப்படும் மறை எண்ணங்கள் காரணமாக ஜெப் புஷ் பின்னடைவை எதிர்நோக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், ஜெப் புஷ் தனது பிரசாரத்துக்கான பெயராக, புஷ் என்பதைத் தவிர்த்து, ‘ஜெப் 2016’ எனப் பெயரிட்டுள்ளமை, அந்த மறையான கருத்துக்களிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவே என எண்ணப்படுகிறது.