முதற்தடவையாக புற்றரையில் தனது முதலாவது சம்பியன் பட்டத்தை வென்ற நடால் !

Rafael_Nadal_1672420c
 கடந்த 2010ஆம் ஆண்டு விம்பிள்டனில் பட்டத்தை கைப்பற்றிய பின்னர், முதற்தடவையாக புற்றரையில்  ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது முதலாவது சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அவர் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் சேர்பியாவின் விக்டர் த்ரோய்ஸ்கியை வீழ்த்தி மூன்றாவது தடவையாக மேர்சிடஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார். 

 கடந்த 2005, 2007ஆம் ஆண்டுகளில் இத்தொடரின் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியபோதிலும், அந்த வருடங்களில் களிமண்தரையில் போட்டித்தொடர் நடந்திருந்தது. இவ்வருடமே முதற்தடவையாக போட்டித்தொடர் புற்றரையில் நடைப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தான் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட இந்த இரண்டாவது வெற்றி தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிப்பதாகவும் நடால் தெரிவித்துள்ளார். 

நடால் இதுவரை 66 பட்டங்களை கைப்பற்றியுள்ள போதிலும், அவற்றில் நான்கு பட்டங்கள் மாத்திரமே புற்றரையில் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.