இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர்கள் கூண்டு மீன்பிடி வளர்ப்பு முறையை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வாகவே, கூண்டு மீன்பிடி முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இதற்கமைய, ராமேஸ்வரம் பகுதியிலுள்ள மீனவர்களுக்கு தமிழக அரசு 90% மானியத்தில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக எமது இராமேஸ்வரத் செய்தியாளர் கூறினார்.
முதற்கட்டமாக 10 மீனவர்கள் தெரிவுசெய்யப்பட்டு 20 கூண்டுகளில் மீன்பிடிக்க தமிழக அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தங்கச்சி மடம் பகுதியிலுள்ள அந்தோனியார்புரம் கடற்கரையில் மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டு, 5,000 மீன்குஞ்சுகள் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டு, வளர்ப்புக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.