ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வலுப்படுத்தி எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மைத்திரி – மகிந்தவை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மகிந்த கோஷ்டி தனியான இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் குழுவின் உறுப்பினர்களாவர்.
2015ம் ஆண்டு பொதுத் தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட உள்ள இந்த தேர்தல் விஞ்ஞாபனம் 19 பக்கங்களை கொண்டது என தெரியவருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாஙங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக ஏற்படுத்தியுள்ள அனைத்து நிறுவனங்களையும் கலைத்து விட போவதாகவும் மத்திய வங்கியின் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தகுதி தராதரமின்றி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.