இலங்கை மத்திய வங்கி ஆளுனர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் கோப் குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு !

BUP_DFT_DFT-156_Fotor

 மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விசாரணையை அடுத்தவாரத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகர தெரிவிக்கின்றார்.

இதற்காக கோப் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு சாட்சி விசா​ணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களில் கையளிக்குமாறு முன்னர் ஆலோசனை வழங்கப்பட்டிருந்த போதிலும், மேலதிக காலஅவகாசம் தேவைப்படுவதாக டியூ குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, சபாநாயகரினால் மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர், அதுதொடர்பில் விசாரணை செய்து, பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகரினால் கோப் குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, விசாரணைகளுக்கு கோப் குழுவினால் டியூ குணசேகர தலைமையில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கோப் குழுவினால் இவ்வாறான விசாரணை முன்னெடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகர மேலும் கூறினார்.