உலகின் மிகவும் வயதான பூனை ‘திப்பனி ரூ” தனது 27 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோவில் உள்ள ‘திப்பனி ரூ’ என்ற பூனை உலகின் மிக வயதான பூனையாக இருந்தது.
அது தனது வயது 27 வருடங்கள், 2 மாதம், 20 நாட்களானபோது தூக்கத்திலேயே இறந்துள்ளதாக கின்னஸ் உலக சாதனை புத்தகம் குறிப்பிட்டுள்ளது.
கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருந்த குறித்த பூனை சாண்டியாகோவில் 1988ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் திகதி பிறந்தது.
சாண்டியாகோவில் உள்ள ஒரு செல்லப்பிராணிகள் கடையில் குறித்த பூனை 6 வார குட்டியாக இருந்த ஷரோன் வோர்ஹீஸ் என்பவர் 10 டொலர்களுக்கு வாங்கியுள்ளார்.
இதன்போது ஒரு பூனைக்கு 10 டொலர் என்பது மிகப்பெரிய தொகையாக இருந்தது. இந்நிலையில் குறித்த பூனை நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததையடுத்து உலகி மிக வயதான பூனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.