வீடு திரும்பினார் பசில் !

 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது.

Basil-Rajapaksa_Fotor

 

 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகள் நான்கிலும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 பிணையாளர்கள் இருவரும் அரசாங்க ஊழியராக இருக்கவேண்டும். என்பதுடன் அந்த பிணையாளர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.கே. ரணவக்க, திவிநெகும வங்கியின் முன்னாள் தலைர் பி.பீ. திகலக்கசிறி ஆகியோரும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 திவிநெகும திணைக்களத்தின் நிதியை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.