அஸ்ரப் ஏ சமத்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “21ம் நூற்றாண்டில் ஊடகம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு இன்று (13-06-2015) மினுவங்கொட, கல்லொலுவ அல்-அமான் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இவ் ஏற்பாட்டினை சிரேஸ்ட ஊடகவியலாளார் எம். ஏ.எம் நிலாம் ஒழுங்குகளை செய்திருந்தார்.
உயர்தரம் கற்கும் சுமார் 110 மாணவ மாணவியர் இதில் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தாஹா முஸம்மில், ஹனீபா எம். பாயிஸ், கலைவாதி கலீல் மற்றும் ஜாவித் முனவ்வர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தாஹா முஸம்மில், ஹனீபா எம். பாயிஸ், கலைவாதி கலீல் மற்றும் ஜாவித் முனவ்வர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.எம்.நிலாம், மகா வித்யாலய அதிபர் மற்றும் ஆசியர் குழாமுடன் இணைந்து, சிறப்பாகச் செய்திருந்தார்.
கருத்தரங்கின் இறுதியில் இடம்பெற்ற பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் தென் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இந்தியாவைச்சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ் உட்பட புரவலர் ஹாஷிம் ஒமர், அஷ்ரப் ஏ. அஸீஸ், புரவலர் பாயிக் மக்கீன், கலைச் செல்வன் ஆகியோருடன் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர். மகா வித்யாலய நூலகத்துக்கு புரவலர் ஹாசீம் உமர் ஒரு தொகுதி நுால்களை அன்பளிப்பு செய்தார். தமி்ழ் நாடு எழுத்தாளார் குருந் படம் தயாரிப்பாளா் பேச்சாளர் ஆளுர் சான் நவாஸ் பிரதான உரை இடம்பெற்றது. அத்துடன் அவருக்கு ஹாசீம் உமர்னால் பொன்னாடை போற்றி கௌரவிக்கபப்ட்டது.