தற்போது திறைசேரியில் தாராளமாக பணம் நிறைந்து உள்ளது. இதன்பிரகாரம் மஹிந்த ராஜபக் ஷவினால் நிதி ஒதுக்கிடாது ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது புதிய அரசின் வேலைத்திட்டத்தினூடாக நிதி ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மேலும் நாட்டின் எந்தவொரு அபிவிருத்தி பணிகளும் நிறுத்தப்படவில்லை. தற்போது கிராமிய அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு அதிவேக பாதையின் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.
நிதி அமைச்சில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பி்ல் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது நாட்டில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அமைச்சரவையினால் எந்தவொரு நிதியும் ஒதுக்கிடப்படவில்லை. இருப்பினும் குறித்த அபிவிருத்தி பணிகள் ஆடம்பரமான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்தோடு மஹிந்த ராஜபக் ஷவினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளில் கேள்விக்கோரல்கள் இல்லாமல் தரகு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக் ஷவி னால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணி கள் தொடர்பில் முறையாக ஆராய்ந்த பின்னர் குறித்த அபிவிருத்தி பணிகளுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
இந்நிலையில் எந்தவொரு அபிவிருத்தி பணிகளும் இடைநிறுத்தப்படவில்லை. திறைசேரியில் தாராளமாக பணம் உள் ளது. நாம் 100 நாள் வேலைத்திட்டத் தின் பிரகாரம் சீர்குலைக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளோம்.மேலும் தற்போது கிராமிய அபிவி ருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட் டுள்ளதுடன், வடக்கு அபிவிருத்திகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன என் றார்.