‘புலம்­பெயர் தமி­ழர்­க­ளை மீண்டும் நாட்­டுக்குள் வர­வ­ழைப்­பது அச்­சு­றுத்தலாகும்’- நிமல்

 

NimalSiripala_360px_12_01_24-300x191போராடி வென்­றெ­டுத்த சமா­தா­னத்தை மீண்டும் பிரி­வி­னை­வா­தி­களின் கைகளில் கொடுக்­கவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. புலம்­பெயர் தமி­ழர்­க­ளை மீண்டும் நாட்­டுக்குள் வர­வ­ழைப்­பது அச்­சு­றுத்தலாகும் என்­று எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.

 

லண்டன் மாநாட்­டிலும் புலி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடந்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

புலம்­பெயர் தமி­ழர்­களை மீண்டும் நாட்­டுக்கு வர­வ­ழைக்க அர­சாங்கம் எதிர்­பார்ப்­ப­தாக தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

புலம்­பெயர் தமி­ழர்­களை நாட்­டுக்குள் அனு­ம­திக்க அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள தீர்­மானம் நாட்­டுக்கு மிகவும் அச்­சு­றுத்­த­லாக அமைந்­து­விடும். யுத்­தத்தை வென்­றெ­டுத்த நாட்டில் வெகு விரைவில் மீண்டும் ஒரு குழப்­ப­கர சூழலை உரு­வாக்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது.

புலம்­பெயர் அமைப்­பு­க­ளு­டனும் புலி அமைப்­பு­க­ளு­டனும் லண்­டனில் இர­க­சிய பேச்­சு­வார்த்­தைகள் நடந்­துள்­ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் உல­க தமிழர் பேரவை முக்­கிய பங்­கினை வகித்­துள்­ளன. அதேபோல் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் செய­லா­ளரும் இதில் கலந்­து­கொண்­டுள்­ளனர். ஆகவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் இலக்கு என்­ன­வென்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சர்­வ­தே­சத்தின் தேவைக்கும் புலம்­பெயர் புலி­களின் தேவைக்கும் அமை­யவே நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்­பட்­டது என்ற குற்­றச்­சாட்டை நாம் ஆரம்­பத்தில் இருந்தே முன்­வைத்தோம்.

ஆனால் அதை யாரும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. இப்­போது இவர்­களின் உண்மை நிலைமை என்­ன­வென்­பது வெளிச்­சத்­துக்கு வரு­கின்­றது. இந்த அர­சாங்கம் வடக்கில் பிரி­வினை வாதி­களின் தேவையை நிறை­வேற்றும் வகையில் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. இன்னும் சிறி­து­காலம் இந்த அர­சாங்கம் ஆட்­சியில் இருக்­கு­மானால் மீண்டும் ஈழத்­துக்­கான அடித்­தளம் இடப்­படும். எனவே நாட்டின் நிலை­மை­களை மக்கள் தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும் . மீண்டும் நாட்டில் குழப்­பங்கள் வரு­மானால் அது மூவின மக்­க­ளை­யுமே பாதிக்கும். எனவே தமிழ், முஸ்லிம் மக்­களும் தமது பாது­காப்பு தொடர்பில் சிந்­திக்கவேண்டும் .

மேலும் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்­பதே எம் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும். ஆனால் அதற்கு முன்னர் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ராது தேர்­த­லுக்கு போவதில் அர்த்தம் இல்லை. எனவே ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் உட­ன­டி­யாக தேர்தல் திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்ற முன்­வ­ர­வேண்டும்.

அதன்­பின்னர் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும். தேர்தலின் பின்னர் மீண்டும் எமது ஆட்சியை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதன் பின்னர் மீண்டும் நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டார்.