கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட “தொழில்நுட்ப ஆய்வுகூடம்”, சட்டத்தரணி HMM.ஹரீஸ் (mp) அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் கடந்த 8ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் திருமதி எஸ்.ஏ. லியாகத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான ஏ.எல். அப்துல் மஜீத், கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ், மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஸீர், மாநகர சபை உறுப்பினர் ஏ. பறக்கதுல்லாஹ், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி ஆகியோரினதும் மேலும் பல முக்கியஸ்தர்களினதும் பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.