இலங்கைக்கான ஜெனீவாவின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம்,விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டுக்கு நான்கு காரணிகள் உள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்ற உரையின்போது தெரிவித்துள்ளார்.
முதலாவது, முன்னாள் ராஜதந்திரி ரி.டி.எஸ்.ஏ திஸாநாயக்கவின் நூல் ஒன்றில் தமரா குணநாயகம், ஜெனிவாவை வதிவிடமாகக்கொண்ட ஈழம் பிரசாரகர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது, விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய தமிழ் தகவல் மையத்துடன் தொடர்புக்கொண்டிருந்தார்.
மூன்றாவது, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன, தமராவை விடுதலைப்புலிகளின் முகவர் என்று தெரிவித்திருந்தார்.
நான்காவதாக 1980 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் தமரா, ஈழத்துக்கான முக்கிய செயற்பாட்டாளராக செயற்பட்டார் என்று மங்கள தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.