ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, கட்சியின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் , இளைஞர்களின் வாக்குகள், புத்திஜீவிகள் மற்றும் கல்வியாளர்களின் வாக்குகளையும் கட்சியினால் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பொது தேர்தலின் போது கட்சியினை வெற்றி பெற செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை இந்நாட்களில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.