V.v];.vk;.[htpj;>
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை அவர்கள் அவர்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள மேல் மாகாண சபையின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புதிய அரசாங்கம் இந்த விடயத்தை கிடப்பில் போடாமல் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார்.
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் மறிச்சுக்கட்டி கிராம மக்களி்ன் மீள்குடியேற்றம்தடைப் படுத்தப்படுத்தப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 2 இலட்சம் கைாயொப்பங்கள் சேகரிக்கும் வேலைத்திட்டம் நாடு தழுவிய முறையில் இன்று(2015-06-12) ஆரமப்பமானது,
அதனது ஒரு கட்டமாக கொழும்பு மருதானை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக கையொப்பமிடும் நிகழ்வினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் கருத்துரைக்கையில்
இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதுாக்கிய காலத்தில் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள்அங்கிரந்த வெளியேற்றப்பட்டனர்.இன்றுடன் 25 வருடங்கள் கழிந்த நிலையில் இன்னும் இந்த மக்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெறவில்லை.இது தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டும் வந்துள்ளேன்.
இந்த அரசாங்கத்தின் அரைசாங்கத்தின் அமைச்சரான றிசாத் பதியுதீனும் இது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசியிருப்பார்.எது எவ்வாறாக இருந்தாலும் இந்த மக்களது வாழ்கையின் வைத்துக் கொண்டு சிலர் அரசியல் செய்ய முயல்கின்றனர்.
அதனை அவர்கள் செய்யாது அனைவரும் ஒன்று பட்டு இந்த மக்களது மீள்குடியேற்றத்தினை செய்ய ஒத்துழைப்பினை செய்ய வேண்டும்.கடந்த மஹிந்த ஆட்சியில் பொதுபலசேன மற்றும் ராவன பலய என்பன முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட போதும்,அந்த அரசு மௌமான பார்த்துக்கொண்டிருந்தது.
அதனால் தான் முஸ்லிம்கள் ஆட்சி மாற்றம் ஒன்றினை கோறினர்.இந்த அரசாங்கத்தை உருவாக்கியது அந்த இனவாத சக்திகளை கட்டுப்படுத்த என்பதையும் மறந்துவிட முடியாது என்றும் கூறினார்.