எம்.வை.அமீர்
1990 ஆண்டு வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி இரண்டு லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதில் 2015-06-12 ஜும்மா தொழுகையின் போது கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்களின் கீழ் உள்ள ஏற்றுமதி அதிகாரசபையின் இணைப்பாளர் ஏ.எல்.முக்தார் (ஜஹான்) அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நிகழவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது கொள்கைபரப்புச் செயலாளர் மருதூர் அன்சார் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளர் றிசாத் மஜீத் உள்ளிட்ட பிரமுகர்களும் அதிகளவிலான ஆதரவாளர்களும் முன்வந்து தங்களது கையொப்பங்களை இட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கு கருத்துத் தெரிவித்த வடபுல மக்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்களின் கீழ் உள்ள ஏற்றுமதி அதிகாரசபையின் இணைப்பாளர் ஏ.எல்.முக்தார் (ஜஹான்), வாழ்விடங்களை இழந்து அகதி வாழ்க்கை நடாத்திக்கொண்டிருக்கும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அமைச்சர் றிஷாத் பதியூதீன் மேற்கொண்டு வரும் பங்களிப்பை பாராட்டியதுடன் வடபுல மக்களின் துன்பத்தில் அக்கறைகொள்ளும் அனைவரும் இந்த கையெழுத்திடும் நிகழ்வில் இணைந்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.