மகிந்த பேரணிக்கு கூட்டமைப்பின் பெயரில் அறிவித்தல் பிரசுரித்தது யார்?

Unknown m
மாத்தறையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெயரை பத்திரிகை விளம்பரத்திற்காக பயன்படுத்தியது யார் என்பது தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன கோரியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என அமைச்சர் தெரிவித்ததுடன்,

ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படாமல்,கூட்டமைப்பின் பெயரில் இவ்வாறு விளம்பரங்களை வெளியிட முடியாது எனவும், அவர் தெரிவித்தார்.

குறித்த அறிவித்தலை விடுத்த தரப்பினர் இதற்கு முன்னர் வேறு பெயர்களிலேயே அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.

ஆனால் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்தி இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை மக்களை தம்வசப்படுத்திக்கொள்ளவே என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாத்தறை பேரணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவார்களா என ஊடகவியலாளர் ஒருவர் வினவியமைக்கு, அவ்வாறு சென்றார்கள் என்றால் அது கூட்டமைப்பின் கூட்டமாக அமைந்து விடாது என அமைச்சர் பதிலளித்தார்.

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாறான கூட்டங்களில் பங்குபற்றுதலை தடுக்கும் காலம் வெகு சீக்கிரத்தில் உதயமாகும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.