கோத்தபாயவை பிரதமராக்க ஹெல உறுமய முயற்சி !

Unknownமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கு ஜாதில ஹெல உறுமயவினால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு அவசியமான பின்னணியை தாயாரிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருங்கிய இருவரான அசோக அபேகுணசேகர மற்றும் திலித் ஜயவீர, ஹெல உறுமயவின் யோசனை எடுத்துக்கொண்டு கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளார்கள். 

இச்சந்திப்பின் போது கோத்தபாய ராஜபக்சவினால் சாதகமான முடிவு கிடைத்திருப்பதனால், மேலதிக பேச்சுவார்த்தைக்காக பிவிதுரு ஹெடக் அமைப்பின் ஏற்பாட்டாளர் அதுரலிய ரத்ன தேரர், கோத்தபாயவை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கோத்தபாய ராஜபக்ச இக்கோரிக்கைக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றால், சபாநாயகர் சமல் ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.