அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களின் தகுதியை ஆராயும் நிலையில் இலங்கையின் உயர்சபையாக விளங்கும், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் 142பேர் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கூட சித்தியெய்தவில்லை என்று கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாக கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள சர்வோதயத்தின் தலைவர் ஏ டி ஆரியரட்ன, ஐக்கிய நாடுகளின் முன்னாள் இராஜதந்திரி ராதிகா குமாரசுவாமி மற்றும் முன்னாள் நீதிபதி சலாம் ஆகியோரின் தகுதிகள் குறித்து அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே தென்னக்கோன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதன்மூலம் குற்றச்செயல்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.