இந்திய அரசியல்வாதிகள் ஆத்திரம் மற்றும் விரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசிவருவதாக கூறியுள்ள பாகிஸ்தான் அதனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் வங்கதேச சுற்றுப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியது வெறுப்பை பரப்புவதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுவை சீர்குலைப்பதாகவும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் மியான்மர் தாக்குதல் பற்றி மத்திய இணையமைச்சர் ராஜ்யவரதன் ரத்தோரின் ”பாகிஸ்தான் உட்பட தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து அண்டை நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை” என்ற கருத்துக்கும் தீர்மானத்தில் கண்டணம் தெரிவிக்கப்படுள்ளது.
இந்திய அரசியல்வாதிகள் ஆத்திரம் மற்றும் விரோதத்தை ஏற்படுத்தும் பேச்சுகள் இந்தியாவின் மேலாதிக்க மனப்போக்கையே காட்டுவதாகவும், இது போன்ற எதிர்மறையான அறிக்கைகளால் பிராந்திய அமைதி, இறையாண்மை மற்றும் நிலைத்தன்மை பாதிக்கும் எனவும் கூறப்படுள்ளது.