தேர்தல் திருத்தம் சம்பந்தமான 18 அரசியல் கட்சிகள் பங்கு பற்றியஅவசரக் கூட்டமொன்றை பத்தரமுல்லை வோட்டரஸ் ஏஜ் ஹோட்டலில் வியாழக்கிழமை (11) மாலைநடைபெற்றது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்டகிரஸ் தலைவரும், நகரஅபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களானரவூப் ஹக்கீம்,பழனிதிகாம்பரம், இராஜாங்க அமைச்சர் ஹஸனலி,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார்,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன், ஆர்.யோகராஜன்,செல்வம் அடைக்கலநாதன்,மேல் மாகாண சபை உறுப்பினர் மனோகணேசன், ஜெ.சிறிதூங்க, வை.எல்.எஸ்.ஹமீட், எஸ்.அருள்சாமி, எஸ்.குகவரதன்,நிசாம் காரியப்பர்,குமரகுருபரன்,சரத் அத்துகோரள்ளஆகியேர் உட்பட 18 கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
இந்தகலந்துரையாடல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது.
இக்கூட்டத்தின் இறுதியில் அமைச்சர் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில்,
‘இன்று 18 அரசியல் கட்சிகள் அவசரமாகக் கூடி தேர்தல் சீர்திருத்தம் பற்றி தீவிரமாக ஆராய்ந்திருக்கின்றோம். அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புதிய தேர்தல் திருத்தச் சட்டநகல் மற்றும் அதில் அடங்கியுள்ள அம்சங்கள் குறித்தும் நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற புதியவரைவை நாம் இன்று (வியாழக்கிழமை) ஆராய்ந்த பொழுது,வாக்காளர்கள் இரண்டு வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துகின்ற உரிமை வழங்ப்பட்டால் ஒழிய புதிய தேர்தல் முறையை நாங்கள் ஆதரிக்கமுடியாது என்றதீர்க்கமான தீர்மானத்திற்கு வந்திருக்கின்றோம்.
அதுபற்றி 18 சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சிகளும்,சிறியகட்சிகளும் ஓர் அறிக்கையை ஊடகங்களினூடாக விடுகின்றோம். நாளை நடைபெறம் அமைச்சரவையில் இது பற்றி பேசுவதற்கு எங்களுக்கு ஆணைவழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒருதேர்தல் தொகுதிக்கு வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுகின்ற பொழுதுவெற்றி பெறுகின்ற வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கின்ற அடிப்படையில் வாக்குகள் வழங்கப்படுகின்ற ஒரு சூழல் இருக்கின்ற காரணத்தினால்,பெரியகட்சிகளுக்கு வாய்ப்பானதொரு சூழல் விகிதாசார முறையில் மாவட்ட ரீதியாககணக் கெடுக்கப்படுகின்ற பொழுது தொகதிக்கு வழங்குகின்ற வாக்குகளை மாவட்டத்திற்கும் ஏற்புடையதாக மாற்றுகின்றபொழுது ஆசனங்கள் பாரியசிறுபான்மையினங்களுக்கும், சிறியகட்சிகளுக்கும் பாதகமாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.
இதேதேர்தல் முறைநடைமுறையிலுள்ளபலநாடுகளில் இரட்டைவாக்குச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டிரு
ஆசனங்களின் எண்ணிக்கை கூட்டுப்படுவது,குறைக்கப்படுவது சம்பந்தமான விஷயத்தில் ஏற்பட்டிருக்கின்றசர்ச்சை குறித்து எங்களுக்கிடையிலும் கருத்து முரண்பாடுகள் உண்டு. நாங்கள் இந்தஅடிப்படை விஷயம் சம்பந்தமாக எங்களது ஒரு மித்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அவை பற்றி பேசலாமென்று நாம் எண்ணுகின்றோம்.’ என்றார்.
18 அரசியல் கட்சிகளின் கலந்தாலேசனையின் பின்னர் வெளியிடப்பட்ட ஊடகக அறிக்கை
முன்வைக்கப்பட்டுள்ள உத்தேசதேர்தல் சீர்திருத்ததின் கீழ்ஒவ்வொருதொகுதிக்கும் வேட்பாளர் ஒருவரை அறிமுகப்படுத்துகின்ற அதேவேளை,குறித்ததேர்தல் தொகுதியில் யார் வெற்றிபெற்றவர் என்றஅடிப்படையில் வேட்பாளரைத் தீர்மானித்த பின்னர்,அதேவாக்கைக் கொண்டு விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் கட்சிகள் பெறுகின்ற ஆசனங்களை தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்ததேர்தல் முறையில் அடிப்படையில் தவறிருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும்கட்சியைவிட வெற்றிபெறுவதற்கு சாத்தியமானவேட்பாளருக் கேவாக்காளர்கள் வாக்களிப்பது வழக்கமாகும். எனவே இதனால் இரண்டுபலமான கட்சிகளே நியாயமற்றமுறையில் தொகுதியில் அக்கட்சிகளுக்குரிய வாக்குப்பலத்துக்கு முரணானமுறையில் நன்மையடையும் வாய்ப்பு உள்ளது.
அத்துடன் இந்த வாக்கைவைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த பின்னர் மாவட்ட மற்றும் தேசிய விகிதாசா ரபிரதிநிதித்து வங்களை தெரிவுசெய்கின்ற போழுது பிரதான கட்சிகளை தவிர்ந்த எனைய கட்சிகள் இரண்டாவது முறையாகவும் பாதிக்கப்படுகின்றன.
இதனால் தான் இவ்வாறானதேர்தல் முறைநடை முறையிலுள்ள ஏனைய நாடுகளில் இரண்டு வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றது. அதனால் பிரதான கட்சிகளுக்குப் புறம்பாக குறைந்தபட்சம் தாம் விரும்பும் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதன் மூலம் சட்டபூர்வமான பிரதிநிதித்துவத்தைப் பெறலாம். இரட்டைவாக்குச் சீட்டுவழங்கப்படாத பட்சத்தில் உண்மைனயான தேர்தல்பெறு பேறுகள் திரிவுபடுத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் உண்டு. இதனால் வாக்காளர்களின் உண்மையான மனேநிலை பிரதிபலிக்கப்படுவதற்கு இடமில்லாமல் போகின்றது.
உத்தேசதிட்டத்தில் காணப்படும் அடிப்படைத் தவறு காரணமாக நாங்கள் அதனை எதிர்ப்பதோடு ஆசனங்களின் எண்ணிக்கை உட்பட பிரஸ்தாபதிருத்தத்தின் ஏனைய அம்சங்களை பரிசீலிப்பதற்குமுன்னர் இரட்டைவாக்குச் சீட்டுயோசனையை ஏற்றுக் கொள்ளுமாறு கோருகின்றோம்.