முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் சவாலாகவே இருந்து வருகின்றது -கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்.

பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை பிரதான வீதியில் கடந்த 1990ம் ஆண்டுக்கு முன்பு குடியிருந்தவர்களின் காணிகளில் மீளக்குடியமர்வது என்பது ஓர் பாரிய சவாலாகவே இருந்து வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த காணிப் பிரச்சினை சம்பந்தமாக கடந்த இரண்டரை வருடங்களாக செங்கலடி பிரதேச செயலகத்திற்கும், காணி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அலைந்து திருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினரான என்னிடம் அப் பிரதேச மக்கள் தெரிவித்த போது, இவ் விடயம் சம்பந்தப்பட்ட செங்கலடி பிரதேச செயலகத்திற்கு நான் விஜயம் செய்து விசாரித்து அந்தக் காணிகளை மீளளிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அணுகுவதென்பது முஸ்லிம்களை பொருத்தமட்டில் குறிப்பாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேலும் தெரிவித்தார்.
3-JA_Fotor 1JA_Fotor 4-JA_Fotor