தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக மோட்டார் சைக்கிள் வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் !

download
பழுலுல்லாஹ் பர்ஹான்
 வெகுசன ஊடகவியலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஊடகப் பணியினை கௌரவித்தல் மற்றும் அவர்களின் நலன்புரியினை அதிகரிக்கச் செய்வதன் மூலம் மிகவும் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறனுள்ள தொழில்ரீதியிலான ஊடகவியலாளர் பிரிவொன்றாக மாற்றும் நோக்கினை முன்னிலையாய்க் கொண்டு இந்த நிகழ்ச்சியினை செயற்படுத்துவதற்கு வெகுசன ஊடக அமைச்சு எதிர்பார்க்கின்றது. 
 
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்
 இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்
 விண்ணப்பிக்கும் திகதிக்கு வெகுசன ஊடகவியலாளராக ,ஊடவியலாளராக ஆகக் குறைந்தது 5 வருட சேவைக் காலத்தினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
 அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டை உள்ளவராக இருத்தல் வேண்டும்
 அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களில் (அச்சு, இலத்திரனியல் மற்றும் செய்தி இணையத் தளம்) ஊடகவியலாளராக சேவையாற்றுகின்ற அல்லது அந்த ஊடக நிறுவனத்தில் இணைந்து சேவைபுரிகின்ற சுதந்திர ஊடகவியலாளர்களுக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும்
ஏனைய வரையரைகள்
01. தான் கோருகின்ற மோட்டார் சைக்கிளின் தீர்வை வரியற்ற பெறுமதியினை உரிமையாளரினால் ஒரே தடவையில் செலுத்த வேண்டியதுடன், மோட்டார் சைக்கிளுக்காக வேண்டி வழங்கப்படுகின்ற தீர்வை வரிப் பெறுமதியினை அரசினால் உரிய மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்கின்ற நிறுவனத்திற்கு மீளளிப்புச் செய்யப்படும்.
02. 5 வருட காலம்வரை மோட்டார் சைக்கிளினை விற்பனை செய்ய அல்லது இன்னொருவருக்கு மாற்றீடு செய்ய முடியாது.
03. மோட்டார் சைக்கிளின் பதிப்புரிமை மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கே உரியது என்பதனால், பதிவுக் கட்டணம், காப்பீடு, பராமரிப்பு மற்றும் உரிய அனைத்து செலவுகளும் உரிமையாளரினால் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும்.
04. சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்காக வேண்டி மோட்டார் வாகனம் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனம் கொள்வனவு செய்த ஊடகவியலாளர்கள் இதற்காக வேண்டி கவனத்திற் கொள்ளப்படுவதில்லை
தெரிவு செய்யும் முறை
வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படுகின்ற தேர்வுக்குழுவொன்றின் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யும் போது அமைச்சின் செயலாளரின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும்.
விண்ணப்பிக்கும் முறை
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு இணங்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் உரிய சேவைச் சான்றிதழ் மற்றும் ஊடக அடையாள அட்டையின் பிரதிகளுடன் செயலாளர், வெகுசன ஊடக அமைச்சு, இலக்கம்.163, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொடை, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் 2015-06-22ஆந் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
 கடித உரையின் இடது பக்க மேல் மூலையில்
‘வெகுசன ஊடகவியலாளர்களுக்காக வேண்டி தீர்வை வரியின்றி மோட்டார் சைக்கிள் விலைக்கு பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டம் – 2015’ எனக் குறிப்பிடப் பட வேண்டும்.
மேலதிக விபரங்களுக்காக வேண்டி திரு. பீ.கே.எஸ். ரவீந்திர, மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) 0112-513943 தொடர்பு கொள்ளலாம். வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தான அறிவித்துள்ளார்.
Page3 Page4