பழுலுல்லாஹ் பர்ஹான்
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கமைய வெளி நோயாளர்களின் நன்மை கருதி இலங்கையிலுள்ள போதனா வைத்திய சாலைகளில் வெளி நோயாளர் பிரிவுக்கான நேரம் காலை முதல் இரவு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவுக்கு தங்களது நோயை காட்டுவதற்கு வரும் வெளி நோயாளர்கள் திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.மணி தொடக்கம் இரவு 10 மணி வரையும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 8.மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையும் வெளி நோயாளர்கள் வைத்திய சேவைகளை பெற முடியுமென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் விவேக் தெரிவித்தார்.
மேற்குறிப்பிடப்பட்ட நேரங்களில் வரும் வெளி நோயாளர்களுக்கு தேவை ஏற்படின் இரத்தப் பரிசோதனை மற்றும் கதிர் வீச்சுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு வெளி நோயாளர்களுக்கு மருந்து கட்டும் சேவையும்,மருந்து வழங்கும் சேவையும்; இந்த நேரத்தில் இடம்பெறும்.
குறித்த வைத்தியசாலை 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவும் இயங்கி வருகின்றது.
வெளி நோயாளர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவை கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.