ஒட்டிப் பிறந்த 6 மாத இரட்டைப் பெண் குழந்­தை­களை அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்தெடுப்பு !

ஹெய்ட்­டியில் ஒட்டிப் பிறந்த 6 மாத இரட்டைப் பெண் குழந்­தை­களை அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்து சர்­வ­தேச சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­களைக் கொண்ட குழு­வொன்று சாதனை படைத்­துள்­ளது.

வயிற்றுப் பகு­தியில் ஒட்­டிய நிலையில் பிறந்த மரியன் மற்றும் மிசெல்லி பெர்னார்ட் ஆகிய இந்த இரு குழந்­தை­களும் அமெ­ரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகர சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­க­ளான ஜேம்ஸ் ஸ்ரெயின் மற்றும் ஹென்றி போர்ட் உள்­ள­டங்­க­லாக 18 மருத்­து­வர்கள் மற்றும் மருத்­து­வ ­தா­தி­களைக் கொண்ட குழு­வி­னரால் 7 மணி நேர அறு­வைச்­சி­கிச்சை மூலம் பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

இத்­த­கைய அறு­வைச்­சி­கிச்சை ஹெய்ட்டியில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும்.