ஐ.சி.சி டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார முதலிடத்தில் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இருக்கிறார்.
சங்கக்கார 909 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள் ளார். தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா 2ஆவது, 3ஆவது இடங்களில் உள்ளனர்.
சுமித் (அவுஸ்திரேலியா), மெத்தியூஸ் (இலங்கை), யூனுஸ்கான் (பாகிஸ்தான்), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூஸிலாந்து), வோர்னர் (ஆஸி.) ஆகியோர் முறையே 4 முதல் 9ஆவது இடங்களில் உள்ளன.
பந்துவீச்சில் ஸ்டெய்ன் (தென்னாபிரிக்கா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹாரீஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். தென்னாபிரிக்கா 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளன. நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 8ஆவது இடங்களில் உள்ளன.
நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் இந்தியா 99 புள்ளி பெற்று 3ஆவது இடத்தில் இருக்கிறது. பங்களாதேஷிற்கு எதிரான ஒரே டெஸ்டை வென்றால் இந்தியா ஒரு புள்ளி கூடுதல் பெற்று அதே 3ஆவது இடத்தில் நீடிக்கும். ஒரு வேளை தோற்றால் 95 புள்ளிகளுடன் 7ஆவது இடத்துக்கு பின்தங்கும். சமநிலை யில் முடிந்தால் 2 புள்ளிகளை இழக்கும். ஆனாலும் அதே 3ஆவது இடத்தில் நீடிக்கும்.
பங்களாதேஷ் 39 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையா டும் பங்களாதேஷ் வீரர்களில் துடுப்பாட்ட தரவரிசையில் மொமினுல்ஹக் 24ஆவது இடத்திலும், சகீப் அல் ஹசன் 28ஆவது இடத்திலும், முஸ்பிக்குர் ரிசை யில் மொமினுல்ஹக் 24 ஆவது இடத்திலும், சகீப்–அல்– ஹசன் 28ஆவது இடத்திலும் உள்ளனர்.