இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டில்ஷான், இருபது ஓவர்கள் போட்டிகளில் 4000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் நாட் வெஸ்ட் இருபது ஓவர் தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் டெர்பைஷயர்- துர்ஹாம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய துர்ஹாம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்ட எண்ணிக்கையை எடுத்தது.
மஸ்டார்ட் (20), ஸ்டோன் மென் (28), கோலிங்வுட் (41) சிறப்பாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெர்பைஷயர் அணிக்கு டில்ஷான், டுர்ஸ்டன் ஆகி யோர் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர்.
டுர்ஸ்டன் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹியூக்ஸ் 21 ஓட்டங்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய டில்ஷான் 54 ஓட்டங்களைப் பெற்று அரைசதம் கடந்து இலக்கை எட்ட உதவினார். மேலும் மொத்தமாக டி20 போட்டிகளில் 4000 ஓட்டங்களை கடந்தார்.
இருப்பினும் அடுத்து வந்தவர்கள் சோபிக்க தவறியதால் டெர்பைஷயர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் துர்ஹாம் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.