இலங்கையில் நஸரிஸ்தான் என்ற தனி முஸ்லிம் நாடு விரைவில் கிழக்கில் உதயமாகும் என எச்சரிக்கை விடுக்கும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதயகம்மன்பில, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையான கிழக்கில் தனி முஸ்லிம் நிர்வாக அலகு வழங்கப்படுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும்போதே உதயகம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கிழக்கில் கரையோர பிரதேசத்தில் தனியான முஸ்லிம் நிர்வாக அலகை கோரினார். ஆனால் மஹிந்த இதனை நிராகரித்தார்.
அதன் பின்னரே ஹக்கீம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினார். இன்று முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜனாதிபதிக்கு முஸ்லிம் அலகு தொடர்பில் நினைவுபடுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
பொதுத்தேர்தலில் ஆதரவு இதன் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது. இதற்கு ஜனாதிபதி என்ன பதில் வழங்குவார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நஸிரிஸ்தான் என்ற தனி முஸ்லிம் நாடு கிழக் கில் உதயமாகும் ஆபத்து உள்ளது.
வில்பத்து காடு எவரது ஆட்சியில் அழிக்கப்பட்டாலும் அது பிழையானதுதான். ஆனால் இன்றைய ஆட்சியிலேயே வில்பத்து வனம் அழிக்கப்பட்டுள்ளது. ரிஷாட்டும் விக்கினேஸ்வரனும் நாட் டின் சட்டங்களை மதிப்பதில்லை. அனைவ ருக்கும் சட்டம் பொதுவானது. எனவே இவர்கள் இருவருக்கு மட்டும் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என்றும் உதயகம்மன்பில தெரிவித்தார்.