கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக உள்ளக கிரிக்கெட் பயிற்சிக்கூடத்தை நிச்சயமாக அமைத்துக்கொடுப்போம் என்றும், இதற்கு 50 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணக்கிட்டுள்ளதாகவும் அதற்கு மேல் சென்றாலும் பரவாயில்லை எவ்வளவு செலவானாலும் அதை செய்துகொடுப்போம் என இலங்கைக் கிரிக்கெட்டின் தலைவர் சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.
இலங்கைக் கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் பேசிய சிதத் வெத்தமுனி, உள்ளக பயிற்சிக்கூடங்களை அமைப்பதன் மூலம் வீரர்களின் திறமைகளை மேம்படுத்த முடியும். அதேநேரம் வீரர்கள் விரும்பிய நேரத்தில் வந்து பயிற்சிகளில் ஈடுபடமுடியும். இம்மாதிரியான பயிற்சிக்கூடங்கள் பல நாடுகளில் இருக்கிறன. ஏன் பங்களாதேஷில் கூட இருக்கிறது. இந்த விடயத்தில் நாம் பத்து வருடங்கள் பின்தங்கிவிட்டோம். நீச்சல் தடாகத்தையும் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் அமைக்கபடும் என்றும் அவர் தெரிவித் தார்.
இந்த வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவை அடுத்த மாதம் 02ஆம் திகதி நடத்தத் திட்ட மிட்டுள் ளதாகவும் அவர் தெரிவி த்தார்.