“திண்மக்கழிவகற்றல் பிரச்சினை தொடர்பில் எமது அணுகுமுறை என்ன..?” NFGG நடாத்திய விசேட ஊடக சந்திப்பு..!

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றல் பிரச்சினை தொடர்பில் NFGG யினால் மேற் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று(06.06.2015) பிற்பகல் காத்தான்குடியில் நடை பெற்றது.

NFGG யின் காத்தான்குடி பிரதேச காரியாலயத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் NFGG யின் தவிசாளர், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாள் MBM பிர்தௌஸ் நழீமி காத்தான்குடி NFGG யின் காத்தான்குடி பிராந்திய சூறாசபையின் செயலாளர் ACM ஜவாஹிர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது:

* காத்தான்குடிப் பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றல் பிரச்சினையின் புதிய நிலை என்ன..?

* இதற்கான நிரந்தரத் தீர்வினைக் காண்பதற்கான NFGG யின் ஆலோசனைகளும், அணுகுமுறைகளும் என்ன..?

* காத்தான்குடி நகர சபையின் பதவிக்காலம் முடிவுற்றிருக்கும் நிலையில் பொது மக்களின் நலன் கருதி NFGG மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் எவை..?

* இதற்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கு இருக்கும் சாதகமான சூழ்நிலைகள் என்ன..?

* முன்னாள் தவிசாளர் முன்வைத்த பொய்க் குற்றச்சாட்டுக்கள் எவை..?

* NFGG மேற்கொண்ட கள ஆய்வின் ஊடாகவும், பொது மக்களிடமிருந்தும் கிடைக்கும் அவதானங்கள் எவை..?

போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அப்துர் ரஹ்மான் அவர்களும், பிர்தௌஸ் நழீமி அவர்களும் விரிவான விளக்கங்களை வழங்கினர்.

இந்த விளக்கங்கள் அடங்கிய ஒலிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

NFGG-Press-Meet-06_Fotor NFGG-P-Meet-06_Fotor