(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் 60 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் வன் செயல்களினால் இடம்பெயர்ந்து வீடுகளை கட்டுவதற்கு வசதி இல்லாமல் தகரக் கொட்டில்களில் வாழ்ந்து வரும் சிகரம் கிராம மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு முடியும் தருவாயில் காணப்பட்டு வரும் குறித்தி வீட்டுத் தொகுதியின் அபிவிருத்திப் பணிகளை ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
06-06-2015 நேற்று சனிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து சிகரம் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற சிகரம் பொது மக்களுடனான விஷேட சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.
இதில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் நிருவாகிகள், சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகிகள்,சிகரம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,சிகரம் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.