அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் விலை போகக்கூடிய அப்பிள் கணினியை அதன் மதிப்பு தெரியாமல் குப்பையில் போட்டுள்ளார்.
அமெரிக்காவின் சிலிகன் வேலியில் உள்ள மறுசுழற்சி கடைக்கு வந்த பெண் ஒருவர் சேதமடைந்த மற்றும் பயன்படாத பொருட்களை குறைந்த விலைக்கு விற்றுள்ளார். அந்த பெண் சென்ற பின்னர் அவர் கொண்டுவந்த பெட்டி ஒன்றை திறந்து பார்த்த கடை ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெட்டியில், மறைந்த அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் அவரது சகாக்கள் 1976-ல் உருவாக்கிய முதல் தலைமுறையை சேர்ந்த 200 கணினிகளில் ஒன்று இருந்துள்ளது. ஆனால், அது இறந்துபோன கணவனின் கணினி என்பதால் அதை எடைக்கு போட்ட பெண்ணிற்கு அதன் மதிப்பு தெரியவில்லை