விகாரைக்குச் செல்லும் என்னை அரசியல் மேடையில் ஏற்ற சிலர் ஆவலாக உள்ளனர்!

விகா­ரை­களில் மாத்­திரம் இருந்து வரும் என்னை மீண்டும் அர­சியல் மேடை­யேற்ற சிலர் முயற்­சித்து வரு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

நேற்று முன் தினம் இடம் பெற்­றுள்ள மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இதன் போது அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

நான் அர­சி­யலில் இருந்து வில­கி­யதன் பின்னர் விகா­ரை­க­ளுக்கு சென்று வரு­வ­தை நான் விகா­ரை­களில் அர­சியல் செய்­வ­தாக சிலர் விமர்­சிக்­கின்­றனர்.

நான் என் மீது பற்றுக் கொண்­டுள்ள மக்­களின் அழைப்­பி­லி­ருந்து தப்பிக் கொள்ளும் நோக்­கி­லேயே விகா­ரை­க­ளுக்கு சென்று வரு­கிறேன். இதனை எவரும் விமர்­சிக்க வேண்­டிய அவ­சியம் கிடை­யாது.

இவ்­வாறு என்னை விமர்­சிப்­ப­வர்கள் விகா­ரை­க­ளுக்குச் செல்லும் மஹிந்­தவை மீண்டும் அர­சியல் மேடை­களில் ஏற்றிப் பார்க்க ஆசைப்­ப­டு­கின்­றனர் போலும்.

நான் மீண்டும் அர­சி­ய­லுக்கு பிர­வே­சித்தால் என்ன நடக்கும் என்­ப­தனை என்னை விமர்சிப்பவர்கள் அறி­யா­த­தல்ல. ஆனாலும் அவர்கள் என்னை விமர்­சிக்­கின்­ற­ார்கள். அவர்­க­ளுக்கும் மைத்­திரி (அன்பு) பிறக்­கட்டும் என வாழ்த்­து­கிறேன் என தெரி­வித்­துள்ளார்.