பழுலுல்லாஹ் பர்ஹான்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம்-காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06-06-2015 நாளை சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர் விஜயவர்தன மாவத்தையிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவும் சிறப்பு விருந்தினர் மற்றும் விஷேட ,சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ,அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர்,தினகரன் நாளிதழ் பதில் ஆசிரியர் குணராசா,வீரகேசரி நாளிதழ் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன்,தினக்குரல் நாளிதழ் பிரதம ஆசிரியர் ஸ்ரீஹரன்,ஞாயிறு தினக்குரல் பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம் ,ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் யூ.எல்.யாகூப்,சுடர் ஒளி பிரதம ஆசிரியர் பத்மசீலன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இங்கு நூல் ஆய்வுரையை கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸ் நிகழ்த்தவுள்ளதோடு சிறப்புரையை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸூஹைர் நிகழ்த்தவுள்ளார்.
இதில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூலின் முதற்பிரதியை முசலி பிரதேச சபை தவிசாளர் டப்ளியூ.எம்.யஹ்யான் பெறவுள்ளதோடு நூலாசிரியர் அறிமுகத்தை கலைஞர் கலைச் செல்வனும், வாழ்த்துரையை சிரேஷ்ட ஊடகவியாலாளர் எம்.ஏ.எம்.நிலாமும், கருத்துரையை ஊடகவியலாளர் ஏ.ஜி.எம்.தௌபீக்கும் வழங்கவுள்ளனர்.
குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.