தமிழகத்திலும் ‘மேகி ‘நூடில்சிற்கு தடை !

 images (4)டில்லி, குஜராத், உத்தர்கண்ட் மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் மேகி உள்ளிட்ட 4 வகையான நூடுல்சிற்கு மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், ‘நெஸ்லே’ இந்தியா நிறுவனத்தின், பிரபல தயாரிப்பான, ‘மேகி நுடுல்ஸ்’ பின்னணியில், பெரும் ஆபத்து இருப்பது, உ.பி., மூலம்வெளிச்சத்துக்கு வந்துள்ளத

அடுத்து, பீகாரில், ‘மேகி நுடுல்ஸ்’ சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு, உடல்நல பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில், நிறுவன அதிகாரிகள்; விளம்பர படத்தில் நடித்த, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மீதும், வழக்கு பதிவு செய்யவும்; தேவைப்பட்டால், கைது செய்து விசாரிக்கவும், பீகார் மாநில, முசாபர்பூர் மாவட்ட கோர்ட், போலீசுக்கு உத்தரவிட்டது.’மேகி’யில் அனுமதி அளவை விட, ‘மோனோ சோடியம் குளூட்டாமேட்’ என்ற சைனீஸ் உப்பு அதிகம் உள்ளது என, உ.பி.,யிலும்; காரீயம் அதிகம் உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வக முடிவுகளிலும், தெரியவந்து உள்ளன.சாப்பிட லாயக்கற்றது என தெரிய வந்ததால், நாடு முழுவதும், மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது; இதனால், ‘மேகி நுாடுல்ஸ்’ தயாரித்த, ‘நெஸ்லே’ நிறுவனத்துக்கு நெருக்கடி முற்றுகிறது. டில்லியை தொடர்ந்து, குஜராத், உத்தர்கண்ட், காஷ்மீர் மாநிலங்களிலும் மேகி நூடுல்சிற்கு தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் யாரும் மேகி நூடுல்சை சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். தமிழகத்திலும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ‘மேகி நுாடுல்ஸ்’ மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

‘மேகி நுாடுல்ஸ்’ குறித்து, தேசிய அளவில் சர்ச்சை எழுந்துள்ளதால், தமிழகத்திலும், பரிசோதிக்க முடிவு செய்து, 65 இடங்களில், மாதிரி சேகரித்து உள்ளோம்; அவை, மதுரை, திருநெல்வேலி, கோவை, கிண்டி, சேலம், ஆகிய, ஐந்து இடங்களில் உள்ள, அரசு சோதனைக் கூடங்களில், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.இவற்றின் முடிவு, நாளை தெரியும். ஆய்வு முடிவுகளை பார்த்தபின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அரசு முடிவு செய்யும். சாப்பிட ஏற்றதல்ல என, முடிவுகள் வந்தால், தடை செய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்திலம் மேகி நூடுல்சிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சி தலைவர்கள், வணிகர் சங்கங்கள் மேகி நூடுல்சிற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தின.