தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் !

75521

தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக முன்னாள் மித வேகப் பந்துவீச்சாளர் சார்ல்ஸ் லங்கவெல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.  உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய அலன் டொனால்ட், அண்மையில் குறித்த பதவியிலிருந்த விலகியிருந்தார். அதன் பின்னரே  சார்ல்ஸ் லங்கவெல்ட் – குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

 72 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ள 40 வயதான இவர், 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 9 டுவென்டி டுவென்டி போட்டிகளில் 17 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சார்ல்ஸ் லங்கவெல்ட் – தென் ஆபிரிக்கா அணிக்காக டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.