இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் அணியில் இருந்து முக்கிய வீரர்கள் நீக்கம் !

 squad_image_dec_20_2014_0

 இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் அணியில் இருந்து முக்கிய வீரர்களான ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன், மூயேன் அலி, இயன் பெல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மூயேன் அலி – ஆஷஸ் தொடரின் அணியில் முக்கிய இடம் பிடிப்பார் என்ற நிலையில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்றைய மூன்று வீரர்களும் போதியளவு பெறுதிகளை வழங்காத நிலையில் அணியால் நீக்கப்பட்டுள்ளனர். அவர் முதற் தர போட்டிகளில் விளையாடி இழந்த போர்மை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 உலக்கிண்ண அணியில் இடம் பெற்ற ரவி போபரா, கரி பலன்ஸ், ஜேம்ஸ் ரெட்வேல் ஆகியோரும் அணியால் நீக்கப்பட்டுள்ளனர். ஆதில் ரசீட், சாம் பில்லிங்ஸ், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, மார்க் வூட் ஆகியோர் அணியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். 

அணி விபரம் ஒய்ன் மோகன் (தலைவர்), சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீபன் பின், அலெக்ஸ் கேல்ஸ், க்றிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கட், ஆதில் ரசீட், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ரெய்லர், டேவிட் வில்லி, மார்க் வூட் –