நாம் தோற்றுப் போகவில்லை இது நாம் துவண்டு விடும் தருணமுமல்ல , நமக்கோ இது வரலாற்றை மீண்டும் ஆராயும் உயரிய தருணம்

“பெருந்தலைவர் அஷ்ரபுக்குப் பின்னரான புள்ளியிலிருந்து நீர்ப்பூங்காப் பிரகடனம் வரை”

 [சமகால, கள யதார்த்தங்களை ஆருடம் கூறிய தேசிய காங்கிரஸ்]

என் இனிய உடன்பிறப்புகளே! 

வரலாற்றின் நீண்ட வழித்தடங்களைக் கடந்து வந்த நாம், தேசிய காங்கிரஸ் பயணித்த பாதை பற்றி நன்கறிவோம்.

நமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால மரணத்திற்குப் பின்னர் நமது மக்களைக் குறிவைத்துப் பின்னப்பட்ட பல சதி வலைகளை,தேசிய காங்கிரஸ்  வெற்றிகரமாக முறியடித்து வந்திருக்கிறது.

வடக்கு மற்றும் கிழக்கின் உரிமைகளையும், அபிலாஷைகளையும்வென்றெடுப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைமை வடக்கு கிழக்கில் வாழும் ஒரு தேசிய இனமான முஸ்லிம் மக்களை

‘சிறுகுழு’ என தவறாக அடையாளப்படுத்தியபோது கட்சியை விட்டு வெளியேறிய புள்ளியிலிருந்து தேசிய காங்கிரஸின் அரசியல் கருத்தியலை நாம் ஆய்வுக்குட்படுத்தலாம்.

தேசிய ரீதியில் நமக்கான காணி, நிலம் மற்றும் தேசிய வளங்களை ஆகக்குறைந்தது இனவிகிதாசார அடிப்படையிலாவது பகிர்ந்தளித்துச் சகல இன மக்களுக்குமான தேசியக் காணிக் கொள்கையை முன்னிறுத்தி எல்லா இன மக்களும், இன சௌஜன்யத்துடன் வாழுகின்ற புதியதோர் யாப்பைக் கோரி தேசிய காங்கிரஸ் பாலமுனைப் பிரகடனத்தை வெளியிட்டது.!

Commission for Fair Distribution of Resources எனப்படும் நேர்மையான வளப்பங்கீடுகளைத் தேசிய ரீதியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான ஆணைக்

குழுவின் அவசியம் கருதி இருபத் தோராவது யாப்புத்திருத்தத்தின்போது தேசிய காங்கிரஸின் தலைவரால் முன்மொழியப்பட்டிருந்தும்கை கூடவில்லை.

 எனவே, அதனை  நிறுவுவதற்காகவே  நீர்ப்பூங்காப் பிரகடனத்தைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய காங்கிரஸ் முன்வைத்து  அரசின் ஆணை யை கோரி அதற்காகன  அங்கீகாரத்தையும் பெற்றிருந்தது.

மேலும்,  இன, மத ரீதியிலான குரோதங்களைத் தூண்டும் நபர்களுக்கு எதிராக  முறைப்பாடு செய்வதற்கான ஆணைக்குழுவையும்,

அவர்களைக் கண்டிப்பதற்கான தண்டனைச் சட்டங்களையும் கோரிய உள்ளடக்கங்களை  நமது நீர்ப்பூங்காப் பிரகடனம் முனவைத்து இருந்தது.

அரசியல் காலநிலை மாற்றங்களுக்கேற்ப ஒவ்வாெரு முறையும் அரசியல் யாப்புத் திருத்தங்கள் வரும்போதும் தேசிய காங்கிரஸ் அதன் முன்மொழிவுகளை அவ்வப்பொழுது நேர்மையாகப் பதிவு செய்து வந்திருக்கிறது!

ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் கொள்கைகளைத் திட்டமிட்டு தோற்கடிப்பதற்காகப் பின்னிய சதிவலையில் இன்று நமது சமூகம் பலிக்கடாவாக மாற்றப்பட்டு இருக்கிறது.

தேசிய காங்கிரஸின் கொள்கைககளை உயிராக மதிக்கும் என் உறவுகளே! 

“நாம் தோற்றுப் போகவில்லை, இது நாம் துவண்டு விடும் தருணமுமல்ல” இது நாம் ஆருடம் கூறிய கடந்த காலச் செய்திகளை  மீள ஞாபகப்படுத்தி அசை போடும் காலம்.

அவற்றை  நம் ‘இளம் தளிர்’களுக்கு வரலாற்றுப்பாடம் எடுக்கும் தருணம். நமக்கோ இது வரலாற்றை மீண்டும் ஆராயும் உயரிய தருணம்.

நாம் நமது தாய்நாட்டை நேசிக்கிறோம்.நமக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் ஆறுதல் பகிர்கிறோம்.

ஆதம் (அலை) அவதரித்த இந்த பூமியில் நாம் இறைவனின் அருளை மாத்திரமே நாடுகிறோம்…

நமது மக்களுக்குத் தேவையான தெளிவை ஊட்டுகிறோம். 

கிழக்கை பிரிக்கக் கோரினோம்,நமது மக்களின் நிரந்தர நிம்மதிக்காக.

ஜனாஸா எரிப்பைச் சட்டரீதியாக நிறுத்தினோம் பர்ழு கிபாயாவுக்காக. 

“எம் கடமைகள் எமக்கு அரசியல் செய்யும் மூலதனங்களில்லை”அதுவே தேசிய காங்கிரஸின் அரசியல் தர்மம். அதுவே தன்னலமற்ற அடுத்த தலை முறைக்கான நமது பரிசு.

இவை அனைத்தையும் இன்று எல்லோரும் நிதர்சனமாக உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இத்தனைக்கும்நடுவே நமது கடிவாளங்களை நாம் எங்கும் தொலைத்து விடவில்லை.

தேசிய காங்கிரஸ்  நியாயத்திற்காகத் தொடர்ந்து போராடும் என்ற சுப செய்தியை உங்களுடன் உளமாறப் பகிர்ந்தவனாக, 

இன்று நமது மக்கள் எதிர் கொண்டுள்ள,

சீரற்ற காலநிலையில் இருந்து விடுபட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காய் இறைவனை பிரார்த்தித்தவனாக,

உங்கள் உடன்பிறப்பு,

ஏ.எல்.எம்.அதாஉல்லா.

தலைவர் 

தேசிய காங்கிரஸ்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments