இந்தியாவுக்கு பாலம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு வாக்களியுங்கள் – ACMC தலைவர் றிசாட்

ஊடகப்பிரிவு-

 மதுபானலைசன்ஸ்களுக்காகரணிலை ஆதரித்தோர், இரகசியமாக மதுபானகோட்டாக்களைபெற்றுக்கொண்டோரின் விபரங்கள், எதிர்வரும் சஜித்பிரேமதாசவின் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படுமென அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்றஉறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மன்னாரில்நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும்கூறியதாவது,

கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின்பொருளாதாரம் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மைவாக்குகளாலேயே, ஆட்சிக்கு வந்ததாக மமதையுடன்நடந்துகொண்டார் கோட்டா. மதங்களைப்புண்படுத்துமளவுக்கு அவரது மனநிலை இறுமாப்படைந்தது. கொரோணாவில் மரணித்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களைநல்லடக்கம் செய்யவிடாமல் தீயில் எரித்தார். இந்தஅராஜகத்துக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களே இன்று ரணில் விக்ரமசிங்கவுடன்இணைந்துள்ளனர்.

நாங்கள் செய்தவற்றை நிறுத்துவதற்கென்றே, இங்கு ஒருஇராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டுக்கரைக்குளம், வியாயடிக்குளம், நெடுங்கண்டல் குளம்மற்றும் அஹத்திக்குளம் போன்ற விவசாயக் குளங்களைப்புனரமைத்து, இருபோக நெற்செய்கைக்கு வாய்ப்புக்களைவழங்கவுள்ளோம்.

இங்கே வெள்ளமாகத் திரண்டுள்ள மக்கள் பணத்துக்காகவோ, சாப்பாட்டுப் பார்சல்களுக்காவோ சேர்த்த கூட்டமல்ல. சஜித்பிரேமதாசவை வெல்லவைக்கும் ஒரே வேட்கையோடு சேர்ந்தகூட்டம். சஜித்தின் வெற்றிக்காக அமோக ஆதரவளித்தபெருமையில் முதலிடம் பிடிக்க, மன்னார் மாவட்ட மக்கள்முந்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கு பாலம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வோம்என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments