நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள
ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.