பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி, காசாவுக்கு உதவியை அதிகரிக்க வேண்டும்

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஐ பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது  டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று சந்திருந்தார் .

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி, காசாவுக்கு உதவியை அதிகரிப்பது தற்போது அவசரமாக மேற்கொள்ளவேண்டிய விடயம் என இருவரும் ஒருமித்த கருத்துடன் சம்மதித்துள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

இங்கிலாந்து மற்றும் ஜோர்டான் இடையேயான வலுவான மற்றும் நீண்டநாள் பாதுகாப்பு கூட்டாண்மையை தொடர ஆவலாக தான் இருப்பதாகவும் பிரித்தானிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.