சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாட்டின் கடன்களை அடைக்கக்கூடிய வராகவும் உள்நாட்டு வளங்களை விற்காதவராகவும் இருப்பார் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பல வேட்பாளர்கள் ஆவலுடன் கட்சியுடன் கலந்துரையாடி வருகின்றனர் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதனை கூறினார்.