ரஷ்யா தனது அணுஆயுதங்கள் சிலவற்றை பெலாரசுக்கு நகர்த்த இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருந்தார்.
தடைசெய்யப்பட்ட யுரேனியம் உள்ளடக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்க முன் வந்ததை காரணம் காண்பித்தே புடின் இந்த நகர்வினை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அணுஆயுதங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பணிகள் அனைத்தும் ஜூலை மாதமளவில் நிறைவடைந்துவிடும் எனவும் புடின் தெரிவித்துள்ளார்.
நேட்டோ நாடுகள் பலவற்றிலும் அமெரிக்கா தனது அணுவாயுதங்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது.