முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நம்பிக்கை வெற்றியளிக்குமா ?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொழும்பு அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் எழுப்பப்பட்ட பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். பொதுஜன பெரமுனவில் இருந்து சென்றவர்கள் சரியான நேரத்தில் மீண்டும் இணைந்து கொள்வர்.

இப்போதே அவசியமில்லை. சரியான நேரத்தில் இணைவோம் என தெரிவித்துள்ளார்.