உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை எழுத்து மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுமா தேர்தல்கள் ஆணைக்குழு ?
https://lankafrontnews.com/?p=50323
தேர்தல் ஆணைக்குளுவிற்கும்,
கட்சிகளின் செயலாலர்களுக்கு இடையிலான கலந்துரையாடலில்
தேசிய காங்கிரஸ் தலைவர்
ஏ.எல்.எம். அதாஉல்லா [பா.உ]
நாட்டின் தேர்தல் வரலாற்றில் பல தேர்தல்கள் சாதாரணமாகவே பல ஆண்டுகள் பிற்போடப்பட்டு வந்துள்ளது.
கடந்த நல்லாட்சி காலத்தில் கூட உள்ளூராட்சி தேர்தல் சுமார் 3 வருடங்கள் பிற்போடப்பட்டது நாம் எல்லோரும் அறிவோம்.
பல வருடங்களாகியும் இன்னும் மாகாண சபை தேர்தல் இன்றுவரையும் நடை பெறவும் இல்லை.
இத்தனைக்கும் அந்த காலங்களில் நாடு வங்குரோத்து நிலையில் இருக்கவும் இல்லை.
ஆனால்,
இன்று நாடும் நாட்டு மக்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில்,
நாட்டைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல், தத்தமது கட்சிகளின் பலப்பரீட்சைக்காக தலைவர்கள் முண்டியடிக்கின்றனர்.
தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு
பல முறைகளில் முயற்சி செய்தும் தோற்று போகின்றது. தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை அதனையும் நாம் மதிக்க வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு ,மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற உன்னத நோக்கம் இருந்தால்,அல்லது இருந்திருந்தால்,
கட்சிகளின் கருத்துக்களுக்கு சமாந்தரமாக அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பாராளுமன்றத்தோடும்,அதன் சபாநாயகர் , பிரதமர் மற்றும் ஜனாதிபதியோடும் பேசி தேர்தலுக்கான சாத்தியமான காலத்தை தீர்மானிக்க வேண்டும்.
அப்போதுதான் தேர்தல் திகதியை திட்டவட்டமாக அறிவிக்க முடியும்.
இல்லாவிட்டால், தேர்தலை அறிவிப்பதும் பின்னர் நீடிப்பதுமாக இருந்தால், நாடு இருக்கும் நிலைமைக்கு வீணான செலவுகள் மேலும் மேலும் ஏற்ப்படும்.
இதனால்,மக்களும் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையை இழந்து விடுவார்கள் .
எனவே,தேர்தல்கள் ஆணைக்குழு, மிக விரைவில் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பாராளுமன்றத்தோடும்,அதன் சபாநாயகர் , பிரதமர் மற்றும் ஜனாதிபதியோடும் பேசி தேர்தலுக்கான சாத்தியமான திகதியை தீர்மானிக்க முன் வர வேண்டும்.
தேர்தலுக்கான நிதி என்பது, வெளி நாடுகளில் இருந்து பெறுவது சம்பந்தமாக பேசுகின்றனர்.
நாட்டின் தனித்துவத்திற்கு அது பாரிய அச்சுறுத்தலாகும்.
அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அந்த நிதியை நமது நாட்டில் நமது திறைசேரி ஊடாகவே பெற வேண்டும் அன்றி வெளிநாட்டிலிருந்து அல்ல.
நமது நாட்டின் தேர்தல் ஆணைக்குழுவை வெளிநாடுகள் அவர்களின் தேவைக்காக ஆழ முடியாது.அவர்களை சிபாரிசு செய்து நியமித்ததும் நமது பாராளுமன்றமே தவிர வெளிநாடுகள் அல்ல.
இன்னும் பல விடயங்கள் தேசிய காங்கிரஸ் தலைவரினால்
இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.