இந்நாள் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி

எந்தவொரு அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் சர்வதேச சமூகத்திடமிருந்து கடன் பெற்றுக் கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் பெற்றுக் கொண்டதனை ஓர் வெற்றியாக கருதுவதாகவும், அதனை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், எனது ஆட்சிக் காலத்திலும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொண்டோம். 

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பாதகமானவை கிடையாது.