நடிகர் அஜித்தின் தந்தை இன்று அதிகாலை உயிர் நீத்தார்

கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

 இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் தந்தை இறுதிச்சடங்குக்கு ஒத்துழைப்பு தரும்படி அஜித் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார்.

இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.